Home கலை உலகம் நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்

நடிகர் சங்க அறக்காப்பாளர் பதவியிலிருந்து விலகினார் எஸ்.வி.சேகர்

1282
0
SHARE
Ad

sv-shekarசென்னை – மலேசியாவில் கடந்த சனிக்கிழமை (6 டிசம்பர் 2017) நடந்து முடிந்து நட்சத்திரக் கலைவிழாவைத் தொடர்ந்து தமிழகத் திரையுலகில் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளன.

எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என நடிகை ராதிகா புகார் கூறியுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை மாலை தான் வகித்து வந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்காப்பாளர் (டிரஸ்டி) பதவியை ராஜினாமா செய்வதாக நடிகர் எஸ்.வி.சேகர் அறிவித்திருக்கிறார்.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் சக கலைஞர்களுக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருக்கும் எஸ்.வி.சேகர் அதன் காரணமாக தான் பதவி விலகுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice