Home கலை உலகம் தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்!- கமல்ஹாசன்

தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்!- கமல்ஹாசன்

1092
0
SHARE
Ad

சென்னை: கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்குப் பிறகு பேசிய நடிகர் கமல்ஹாசன், அனைவரும் ஒத்து வந்தால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ் நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த தேர்தலின் போது தபால் வாக்குகள் குறித்து ஒரு சில சர்ச்சை எழுந்ததால் நடிகர் ரஜினிகாந்த் வாக்களிக்க இயலாமல் போனதாக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இம்மாதிரியான சூழ்நிலைகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வழக்கு விவகாரங்களால் நீதிமன்றத்தால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், கடந்த சனிக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் குறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை 23-ஆம் தேதி நடத்த உத்தரவிட்டது.