Home நாடு பெல்டா தலைவர் பதவி விலகினார்!

பெல்டா தலைவர் பதவி விலகினார்!

969
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மத்திய நில மேம்பாட்டு அமைப்பின் (பெல்டா) தலைவர் பொறுப்பிலிருந்து மெகாட் சாஹாருடின் மெகாட் முகமட் நூர் விலகுவதாக பெல்டா அறிக்கை ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளது. வருகிற ஜூன் 30-ஆம் தேதி அவரது பதவிக் காலம் முடிவடைகிறது என்று அது குறிப்பிட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (ஜூன் 24) தாம் பதவி விலகுவதாக மெகாட் சாஹாருடின் தெரிவித்ததாக பெல்டா தெரிவித்தது. பெல்டா அமைப்பின் புதிய தலைவர் குறித்து பொருளாதார் விவகார அமைச்சர் அஸ்மின் அலி அறிவிப்பார் என்று அது குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இவ்வமைப்புக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மெகாட் சாஹாருடின், பெல்டா பிரச்சனைகளைப் புரிந்து கொண்டு கடுமையாக உழைத்துள்ளார் என்று அது குறிப்பிட்டுள்ளது. 

#TamilSchoolmychoice

பெல்டாவை மீண்டும் நிலைத்தன்மை மற்றும் சிறப்பிற்கு இட்டுச் செல்ல பல உருமாற்றத்திட்ட முயற்சிகள் அவரது நிருவாகத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு முன்னிலைப் படுத்தப்பட்டன.