கோலாலம்பூர்: அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஊதிய மானிய திட்டங்களை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க 1.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறிப்பாக சுற்றுலாத்துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்.
கூடுதல் வேலைகளை உருவாக்குவதற்கும், திறன்களை மேம்படுத்துவதற்கும் ஜானாகெர்ஜா திட்டத்தின் கீழ் 3.7 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெல்டா குடியிருப்பாளர்களின் வட்டி கடன்களை இரத்து செய்ய 400 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான உதவித் தொகை ஒரு மாதத்திற்கு 300 ரிங்கிட்டாக அதிகரிக்கும்.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.