Home One Line P1 வரவு செலவு திட்டம்: 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

வரவு செலவு திட்டம்: 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஜாப்ருல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடங்கி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்த ஆண்டு மார்ச் மாதம் புத்ராஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் தேசிய கூட்டணி அரசாங்கத்தின் முதல் வரவு செலவு திட்டமாக இது அமைகிறது.

2021- ஆம் ஆண்டில் மொத்தம் 322.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2020 வரவு செலவு திட்டத்தை விட 7.8 பில்லியன் ரிங்கிட் அதிகமாகும்.

செயல்பாட்டு செலவினங்களுக்காக சுமார் 236.5 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களுக்காக 69 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நிதிக்கு 17 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.