கோலாலம்பூர்: ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கூச்சிங்கில் ஒரு தங்கும்விடுதியை வாங்கியது தொடர்பாக 3.09 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஒன்பது ஊழல் வழக்கில் முன்னாள் பெல்டா தலைவர் ஈசா சமாட் குற்றவாளி என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.
71 வயதான ஈசா, நம்பிக்கை மோசடி மற்றும் மெர்டேகா அரண்மனை மற்றும் சூட் ஹோட்டல் வாங்கியதில் ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டார். ஆனால் நீதிமன்றம் நம்பிக்கை மோசடி வழக்கில் அவரை விடுவித்து, ஊழல் வழக்கில் தம்மை தற்காத்துக் கொள்ள உத்தரவிட்டது.