Home One Line P1 மியான்மார் அவசரநிலையை கண்டிக்க மலேசியாவுக்கு தகுதி இல்லை

மியான்மார் அவசரநிலையை கண்டிக்க மலேசியாவுக்கு தகுதி இல்லை

588
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம் மியான்மார் விவகாரங்களில் தலையிடவோ அல்லது அதன் இராணுவத்திற்கு அறிவுரை கூறவோ தகுதி இல்லை.

மியான்மார் தலைவர்களான வின் மைன்ட் மற்றும் ஆங் சான் சூகி ஆகியோரைக் காவலில் வைத்தது தொடர்பாக மலேசிய வெளியுறவு அமைச்சு அதன் கண்டனத்தை அண்மையில் வெளிப்படுத்தியிருந்தது.

டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் தலைமைக்கும், மியான்மார் இராணுவத்திற்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்றும், இதற்கு முன்னர் இந்த நாட்டில் ஒரு சதித்திட்டத்தை அவர்கள் நடத்தினர் என்றும் முகமட் சாபு வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“மியான்மாரில் நடந்த சதித்திட்டத்திற்கு எதிராக பேசுவதற்கு மலேசியாவுக்கு தகுதி இல்லை, ஏனெனில் ஜூந்தா செய்தது மொகிதின் மற்றும் அவரது அமைச்சரவையால் செய்யப்பட்டது. தேர்தலில் மக்கள் ஆணையை அவர்களே மதிக்கவில்லை. இந்தோனிசியா, தாய்லாந்து பேசுவது நல்லது, ” என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஆளும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் சிலர்  திங்கட்கிழமை அதிகாலை (பிப்ரவரி 1) ஆயுதப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டனர்.