Home One Line P2 ஆஸ்ட்ரோ TUTOR TV எஸ்.பி.எம் மாணவர்களுக்கு உதவ, வழங்கும் நிகழ்ச்சி

ஆஸ்ட்ரோ TUTOR TV எஸ்.பி.எம் மாணவர்களுக்கு உதவ, வழங்கும் நிகழ்ச்சி

576
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எஸ்.பி.எம் மாணவர்களுக்கு உதவும் நோக்கில் ‘30 HARI MENJELANG SPM’ நிகழ்ச்சியை ASTRO TUTOR TV அறிமுகப்படுத்துகிறது. Astro Tutor TV-இன் சிறந்தக் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாகக் கண்டுப் பயன் பெறுங்கள்.

ஜனவரி 23 (சனிக்கிழமை) முதல், எஸ்.பி.எம் மாணவர்கள் சிறந்த ‘30 Hari Menjelang SPM’ நிகழ்ச்சியை Astro Tutor TV-இல் கண்டுப் பயன் பெறலாம். ‘Pelan A+ SPM’, ‘Misi Studi’, ‘Top Tutor’ மற்றும் ‘Top Tips’ ஆகிய நிகழ்ச்சிகளை Astro Tutor TV அலைவரிசை 603-இல், மாலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை தொடர்ந்து 30 நாட்களுக்கு எஸ்.பி.எம் மாணவர்கள் கண்டுப் பயன் பெறுவதோடு தங்களது பாடங்களையும் மீள்பார்வைச் செய்துக் கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சி மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், வரலாறு மற்றும் அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களை உள்ளடக்குவதோடு, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களான கூடுதல் கணிதம் (Additional Mathematics), உயிரியல் (Biology), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணக்கியல் கோட்பாடுகள் (Principles of Accounting), பொருளாதாரம் (Economics) மற்றும் புவியியல் (Geography) ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் உள்ளடக்க வியூகம், சர்வதேச வணிகம் மற்றும் ஜெனெக்ஸ்ட் ஆஸ்ட்ரோவின் (Content Strategy, International Business and GenNext Astro) துணைத் தலைவர் புத்ரி யாஸ்மின் மெகாட் சஹாருதீன், கூறுகையில், “எஸ்.பி.எம் தேர்வுக்காகத் தயாராகும் அழுத்தங்கள், Tutor TV அலைவரிசை 603-இல் எஸ்.பி.எம் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படும் ‘30 Hari Menjelang SPM’ நிகழ்ச்சியின் மூலம் குறைக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த பிப்ரவரி 22-ஆம் தேதி, எஸ்.பி.எ.ம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்விச் செயல்திறன் மற்றும் தயார்நிலையை உறுதி செய்யவும் தொற்றுநோய் காலக்கட்டத்தில் அவர்கள் நேர்மறையாக இருப்பதை உறுதிப்படுத்தவும் ஆஸ்ட்ரோவின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்” என்றார்.

“ஜனவரி 27 முதல், ஒவ்வொரு புதன்கிழமை, மதியம் 3 மணிக்கு, Tutor TV அலைவரிசை 602 மற்றும் Astro Ceria (611 எச்டி, 631 எஸ்டி) ஆகிய அலைவரிசைகளில் கீழ்படிவ மாணவர்களுக்காக ‘SMK: Study Squad’ எனும் கல்விச் சாரந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தயார்படுத்தியுள்ளோம். செரியாவின் நகைச்சுவைத் தொடரான SMK-இன் பிரபல நடிகர்களான வானி ஹஸ்ரிதா மற்றும் அதூ ஜீரோவுடன் படிவம் 1 முதல் படிவம் 3 மாணவர்கள் அவர்களின் பாடத்திட்டத்திற்கேற்ப மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் புவியியல் (Geography) போன்ற பாடங்களை மீள்பார்வை செய்யலாம்.
இம்முயற்சி பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு, குறிப்பாக மின்னியல் அணுகல் இல்லாதவர்களுக்கு உதவும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம். எங்கள் தொலைக்காட்சியில் பலவகையானக் கல்விச் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்குவதன் மூலம், பரந்த அளவிலான இரசிகர்களை சென்றடைய முடியும் என்று நம்புகிறோம். இதன்மூலம் எங்கள் உள்ளடக்கத்தை பலர், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்களும் பயன்படுத்த இயலும். தேர்வுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் முறைகள், எளிமையான மற்றும் சுலபமான மீள்பார்வைப் பாடங்கள், அதிக ஊடாடும் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்ளடக்கத்துடன் மாணவர்களுக்கு, குறிப்பாக இந்த பிப்ரவரியில் எஸ்.பி.எம் தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு உதவுவதில் Tutor TV மகிழ்ச்சி அடைகிறது. தேர்வை சிறப்பாக எழுத அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட ஆரம்பம் மற்றும் இடைநிலைப் பள்ளிகளுக்கான கல்வி தொலைக்காட்சியின் (TV Pendidikan) உள்ளடக்கங்கள் வழக்கம்போல 170-க்கும் மேற்பட்ட புதிய அத்தியாயங்களுடன் Tutor TV -இல் ஒளிபரப்பப்படுகிறது! கல்வி தொலைக்காட்சியின் (TV Pendidikan) உள்ளடக்கங்கள், அனைத்து முக்கிய பாடங்களையும் வணிகம் மற்றும் பொருளாதாரம் போன்றத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பாடங்களையும் உள்ளடக்குகின்றன.

மிகவும் நெகிழ்வான முறையில் பார்த்துப் பயன் பெற, அனைத்து ஆஸ்ட்ரோ கல்விச் சார்ந்த நிகழ்ச்சிளையும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட், ஆஸ்ட்ரோ பிவிஆர் பெட்டி (Astro PVR Box) அல்லது அல்ட்ரா பெட்டி or (Ultra Box) மூலம் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்யலாம். மேல் விபரங்களுக்கு https://astro.com.my/HowTo எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்