கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் தம்மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ளார்.
மங்கோலியன் பெண்மணி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில் தமக்கு சம்பந்தம் இருப்பதாக, டோமி தோமஸ், எழுதியுள்ள குறிப்பு புக்ககத்தில் பதிவிட்டுள்ளார்.
நஜிப்பின் வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா தனது வாடிக்கையாளர், டோமியிடமிருந்து 10 மில்லியனை இழப்பீடும் மன்னிப்பும் கோருவதாகக் கூறினார்.
அவ்வாறு செய்ய தோமஸுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லையெனில் அவரது தரப்பு அடுத்த வாரம் தொடக்கத்தில் தோமஸுக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்யும் என்று ஷாபி கூறினார்.
தோமஸ் தாம் புதிதாக வெளியிட்டுள்ள “மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்” என்ற நூலில் கவனக்குறைவாகவும், பொறுப்பற்றதாகவும், தீங்கிழைக்கும் விதமாகவும், நஜிப்பின் நற்பெயரையும் களங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்று ஷாபி கூறினார்.
“நீங்கள் அவரை ஒரு முழுமையான கொலைகாரர் என்று விவரிக்கிறீர்கள். அவை முற்றிலும் பொய்யானவை, தவறானவை, எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லை,” என்று அவர் கூறினார்.
புத்தகத்தில் உள்ள விககாரம் நஜிப்புக்கு மனச்சோர்வையும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது.