Home நாடு முகமட் இசா மீண்டும் அம்னோவில் இணைந்தார் – சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவாரா?

முகமட் இசா மீண்டும் அம்னோவில் இணைந்தார் – சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவாரா?

572
0
SHARE
Ad

சிரம்பான் : நெகிரி செம்பிலான் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ முகமட் இசா மீண்டும் அம்னோவில் இணைந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் எதிர்வரும் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

அம்னோவின் தலைமைச் செயலாளர் முகமட் இசா அஷ்ராஃப் வாஜ்டி டுசுக்கி அறிவித்தார். அம்னோ உச்சமன்றமும் இந்த முடிவை ஏற்றுக் கொண்டுள்ளதாக டுசுக்கி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

74 வயதான முகமட் இசா, 2018-இல் நடைபெற்ற போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் இன்றைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார்.