Home Photo News கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

1158
0
SHARE
Ad
புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாட்டில் என்.எஸ்.ராஜேந்திரன் தலைமையிலான மலேசியப் பேராளர் குழு

சாண்டா கிளாரா : மூன்றாவது முறையாக நடைபெறும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா மாநகரில் 4 நாட்களுக்கு நடைபெற்றது.

மே 26 தொடங்கி 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்த மாநாடு மே 29-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. எட்டு நாடுகளில் இருந்து நூறு பேராளர்கள் இந்த மாநாட்டில் பேராளர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் கலந்து கொண்டனர்.

அமர்வுக்கு தலைமையேற்கும் என்.எஸ்.ராஜேந்திரன்

புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளரும் தமிழ்க் குழந்தைகள், தமிழ் மொழியை சிறப்பாகக் கற்பதற்கும், தமிழ் பண்பாடு, வரலாறு, கலை, இலக்கிய ஈடுபாடோடு வளர்வதற்கும் தேவையான தற்கால அனுகுமுறைகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும், கலந்துரையாடல்களும் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.

#TamilSchoolmychoice

கலிபோர்னியாவில் இயங்கும் அனைத்துலகத் தமிழ்க் கல்விக்கழகம் இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்து இந்த மாநாடு, கோரோனா காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் தாமதத்திற்குப்பின் இவ்வாண்டு நடைபெறுகிறது.

அமர்வு ஒன்றில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கிறார் மலேசியப் பேராளர் கஸ்தூரி

அனைத்துலகத் தமிழ்க் கல்விக்கழகம் நடத்தும் தமிழ் மொழிப் பாடங்கள், அந்தந்த அரசாங்கக் கல்விக்கழகங்களில் முறையான அங்கீகாரங்களைப் பெறவும், கற்கும் மாணவர்கள் உயர்கல்வி வரை தமிழ் மொழியை விருப்பப் பாடமாகக் கற்க வாய்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்த வகுப்புகள் தமிழர்கள் புலம்பெயர்ந்த ஆறு நாடுகளில் நடத்தப்படுகின்றன; மொத்தம் 16,000 மாணவர்கள் இந்த வகுப்புகளின் வழி தமிழ்க் கல்வியைப் பெற்று வருகின்றனர்.

ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் சுல்தான் இட்ரிஸ் கல்வியயல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மனோஷ் ராமா

மலேசியாவில் இருந்து 15 பேர் கொண்ட குழு 26ஆம் நாள் சாண்டா கிளாரா வந்து சேர்ந்தது. பேராசிரியர் டத்தோ என். எஸ் இராஜேந்திரன் இந்தக் குழுவினருக்குத் தலைமை ஏற்றுள்ளார். மலேசியப் பேராளர்கள் இந்த மாநாட்டின் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர்.

ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கிறார் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சங்கீதா சந்திரகுமாரன்

மலேசியப் பேராளர் குழுவுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படும் பேராசிரியர் இராஜேந்திரன், முத்து நெடுமாறன், சி. ம. இளந்தமிழ் ஆகியோர் அமர்வுகளுக்குத் தலைமை ஏற்றனர். இரண்டாம் நாள் நாள் நடைபெற்ற கருத்தாடல் அரங்குகளிலும் மலேசியர்கள் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.