Home இந்தியா ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து – 200-க்கும் மேற்பட்டோர் மரணம்

ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து – 200-க்கும் மேற்பட்டோர் மரணம்

461
0
SHARE
Ad

பெங்களூரு : இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரையில் மரண எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் மோதிக் கொண்டதால் இன்று சனிக்கிழமை ஜூன் 3-ஆம் தேதி அதிகாலை 1.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

இடிபாடுகளில் பல பயணிகள் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

#TamilSchoolmychoice

பெங்களூரு – ஹவுரா சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் என 3 ரயில்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன.

பெங்களூரு – ஹவுரா ரயில் ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது தடம் புரண்டது. அதன் பல ரயில் பெட்டிகள் கவிழ்ந்து அது சென்று கொண்டிருந்த தண்டவாளத்திற்கு அடுத்திருந்த தண்டவாளத்தில் விழுந்தன. ஒடிசா மாநிலத்தின் பலாசோர் என்னும் மாவட்டத்திலுள்ள பஹாநாக பசார் என்னும் இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

விபத்து நிகழ்ந்த இடத்திலுள்ள தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ஷாலிமார் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளின் மீது மோதியது.

ஷாலிமார் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றொரு சரக்கு ரயிலின் மீது மோதியது.

மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். மரண எண்ணிக்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.