Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : உலகம் குறும்படப் போட்டிக்கான இறுதி ஆள் ஜூன் 30

ஆஸ்ட்ரோ : உலகம் குறும்படப் போட்டிக்கான இறுதி ஆள் ஜூன் 30

485
0
SHARE
Ad

*உலகம் குறும்படப் போட்டிக்கானச் சமர்ப்பிப்புகள் ஜூன் 30 வரை திறக்கப்பட்டுள்ளன

*10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்வதோடு ஒரு டெலிமூவி தயாரிக்கும் வாய்ப்பைப் பெறுங்கள்

‘உலகம் குறும்படப் போட்டி’ பற்றிய விவரங்கள்:

• ரொக்கப் பரிசுகளையும் ஒரு டெலிமூவி தயாரிப்பதற்கான வாய்ப்பையும் பெற இப்போதிலிருந்து ஜூன் 30, 2023 வரை நடைப்பெறும் உலகம் குறும்படப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள உள்ளூர் திரைப்பட இயக்குநர்கள் அழைக்கப்படுகின்றனர்.

• பங்கேற்க விரும்பும் போட்டியாளர்கள் பின்வருபவற்றை செய்ய வேண்டும்:

#TamilSchoolmychoice

o மலேசியக் கருப்பொருளைக் கொண்ட அசல் 20-நிமிடத் தமிழ் குறும்படத்தைத் தயாரிக்க வேண்டும்.

o அவர்களின் குறும்படத்திற்கானப் போஸ்டரையும் தயாரிக்க வேண்டும்.

o மேலும் www.astroulagam.com.my என்ற அகப்பக்கத்தின் வாயிலாகப் பங்கேற்பாளர்கள் போட்டிக்கான நுழைவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்துக் குறும்படம் மற்றும் போஸ்டரை அங்குச் சமர்ப்பிக்க வேண்டும்.

• அசல் தன்மை, படைப்பாற்றல், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், வசனம் மற்றும் திரைக்கதை ஆகியவற்றின் அடிப்படையில் நடுவர்கள் குழுவால் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

• பத்து வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வீட்டிற்குத் தட்டிச் செல்வர்

o முதல் நிலை வெற்றியாளர்: 10,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு மற்றும் ஆஸ்ட்ரோவில் திரையிடப்படும் ஒரு டெலிமூவியைத் தயாரிப்பதற்கான அரிய வாய்ப்பு.

o இரண்டாம் நிலை வெற்றியாளர்: 8,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு.

o மூன்றாம் நிலை வெற்றியாளர்: 6,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு.

o ஏழு ஆறுதல் பரிசு வெற்றியாளர்கள்: ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரிங்கிட் ரொக்கப் பரிசுகள்.

• மேல் விபரங்களுக்கு, ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.