Home One Line P2 தென்னிந்திய நடிகர் சங்கம்: விஷால், நாசருக்கு எச்சரிக்கை கடிதம்!

தென்னிந்திய நடிகர் சங்கம்: விஷால், நாசருக்கு எச்சரிக்கை கடிதம்!

1141
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு நடத்தப்பட்டு பிறகு அதன் முடிவவினை அறிவிக்கவும் தடைக் கோரப்பட்டிருந்தது.

கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற இத்தேர்தலில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் வாக்குகள் எண்ணப்படாமல் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்நிலையில், விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தேர்தலுக்கு தடை கோரியும்தேர்தலை இரத்து செய்ய கோரியும் மனுத்தாக்கல் செய்த ஏழுமலைபெஞ்சமீன் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுஇதனையடுத்து, வழக்கை அக்டோபர் 15-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிநடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக முடிவுகள் அன்றைய தேதியில் தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

 இதனிடையே, நடிகர் சங்கம் முறையாக செயல்படாதது குறித்தும், தனி அதிகாரிகள் நியமனம் குறித்தும் முன்னாள் செயலாளராக இருந்த விஷால் , மற்றும் தலைவராக இருந்த நாசர் ஆகியோருக்கு பதிவுத்துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது