கோலாலம்பூர்: ஒரு வருடம் கழித்து, ஊடகங்களின் வழியாக முகங்களை வெளியிட்ட போதிலும், 66 பேரில் 10 பேர் மட்டுமே முன்வந்து விசாரணைக்கு உதவி உள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
அவ்வாறு செய்யாதவர்கள் காவல் துறையை கூடிய விரைவில் அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த கோயில் கலவரத்தின் போது இவ்வனைத்து 66 பேரும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் மற்றும் அதன் அருகிலேயே இருந்ததாக நம்பப்படுகிறது.
“ஊடகங்கள் அவர்களின் படங்களை வெளியிட்ட பிறகு, 10 பேர் மட்டுமே உதவுவதற்கு முன்வந்தனர். மற்றவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. மற்றவர்கள் முன்வருமாறு நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்” என்று அவர் புக்கிட் அமானில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையில், நான்கு சந்தேக நபர்கள் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று பலரும் நம்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.