Home One Line P1 “தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் தமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்!”- குலசேகரன்

“தொழிலாளர்கள் நலன் கருதி உத்துசான் தமது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்!”- குலசேகரன்

804
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உத்துசான் மெலாயு (மலேசியா) பெர்ஹாட்டின் செயல்முறை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மனிதவளத்துறை அமைச்சர் எம்.குலசேகரரன் கேட்டுக் கொண்டார்.

இந்த முடிவு தொழிலாளர்களின் நலனை உள்ளடக்கியது, அதற்கு பதிலாக, செய்தித்தாள் நிறுவனத்திற்கு மாற்று வழிகளைக் காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உத்துசான் நிருவாகம் அதைக் கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன். ஒருவேளை வேறு யாராவது நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம்,” என்று அவர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

80 வருட நிறுவனத்தை இன்றுடன் நிறுத்துவதாக உத்துசான் குழுமத்தின் பங்குதாரர் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், முடிவெடுக்கப்பட்டபடி நடந்தால், வேலைவாய்ப்பு காப்பீட்டு திட்டத்தின் (எஸ்ஐபி) கீழ் தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்த எஸ்ஐபி ஒரு வேலைவாய்ப்பு காப்பீட்டு முறையாகும்.  ஆறு மாதங்களுக்குள் (நிறுத்தப்பட்ட பின்னர்), தொழிலாளர்களுக்கு தற்போதைய ஊதியத்தின் அடிப்படையில் உதவி வழங்கப்படும். அதே நேரத்தில், எஸ்ஐபி மாற்று வேலை வாய்ப்புகளைக் கண்டறியவும்.  நேர்காணல்கள் வழி அவர்களை வேலைக்கு அமர்த்தவும் உதவும்என்று அவர் கூறினார்.