Home Featured கலையுலகம் ஆஸ்கார்: சிறந்த படம்-ஸ்போட்லைட்; சிறந்த நடிகர்: லியோர்னாடோ டி காப்பிரோ! (விருதுப் பட்டியல் தொடர்ச்சி –...

ஆஸ்கார்: சிறந்த படம்-ஸ்போட்லைட்; சிறந்த நடிகர்: லியோர்னாடோ டி காப்பிரோ! (விருதுப் பட்டியல் தொடர்ச்சி – பாகம் 3)

732
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ் – மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற 2016ஆம் ஆண்டுக்கான 88வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் விருதுப் பட்டியலின் முதலாம், இரண்டாம் பாகங்கள் செல்லியலில் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டது. அதனைக் கீழ்க்காணும் இணைப்புகளில் காணலாம்:

http://www.selliyal.com/archives/122784

http://www.selliyal.com/archives/122797

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து ஆஸ்கார் விருதுகளின் மற்ற வெற்றியாளர்களின் பட்டியல் தொடர்கின்றது:

சிறந்த இயக்குநர் (Best Director)

“தெ ரெவனெண்ட்” என்ற திரைப்படத்தை இயக்கிய அலிஜாண்ட்ரோ கொன்சாலஸ் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.

சிறந்த நடிகை (Best Actress)

சிறந்த நடிகைக்கான விருதை “ரூம்” படத்தில் நடித்ததற்காக பிரை லார்சன் என்ற நடிகை பெற்றுள்ளார்

சிறந்த நடிகர் (Best Actor)

Oscar-Leonardo DeCairo-Kate Winsletஇன்று நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் லியோர்னாடோ டி காப்பிரோவும், அவரோடு “டைட்டானிக்” படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற கேட் வின்ஸ்லெட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பின்போது இணைந்து புகைப்படக்காரர்களுக்கு காட்சி தந்தபோது…

சிறந்த நடிகருக்கான விருதை, பலரும் எதிர்பார்த்ததைப் போலவே “தெ ரெவனெண்ட்” படத்தில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக லியோர்னாடோ டி காப்பிரோ பெற்றுள்ளார்.

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் (Best Foreign Language)

சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்திற்கான விருதை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த “சன் ஆப் சாவுல்” (Son of Saul) என்ற திரைப்படம் பெற்றது.

சிறந்த கார்ட்டூன் முழுநீளப் படம் (Best Animated Feature Film)

கார்ட்டூன் பட வரிசையில் “இன்சைட் அவுட்” (Inside Out) என்ற படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

சிறந்த முழுநீள ஆவணப் படம் (Best Documentary Feature)

சிறந்த முழுநீள ஆவணப் படத்திற்கான விருது “ஏமி” (Amy) என்ற படத்திற்குக் கிடைத்துள்ளது.

சிறந்த குறும்படம் (Best Live Action Short Film)

சிறந்த குறும்படத்திற்கான விருதை “ஷட்டரர்” (Stutterer) என்ற படம் பெற்றுள்ளது.

சிறந்த குறும்பட ஆவணப் படம் (Best Documentary Short Subject)

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சோகத்தைக் காட்டிய, “எ கெர்ல் இன் தெ ரிவர் – தெ பிரைஸ் ஆஃப் ஃபோர்கிவ்னெஸ்” (A Girl in the River: The Price of Forgiveness) என்ற குறும் ஆவணப் படம் இந்தப் பிரிவில் விருதைப் பெற்றது.

ஷார்மீன் ஒபாய்ட்-சினாய் என்ற பெண்மணி இதற்கான விருதைப் பெற்றார். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப் சில சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறந்த இசையமைப்பு (Best Original Score)

சிறந்த இசையமைப்புக்கான விருதை “தெ ஹேட்ஃபுல் எய்ட்” என்ற படத்திற்கு இசையமைத்ததற்காக என்னியோ மொரிகோன் என்ற இசையமைப்பாளர் பெற்றார்.

சிறந்த பாடல் (Best Original Song)

திரைப்படத்தில் இடம்பெற்ற சிறந்த பாடலுக்கான விருதை ஜேம்ஸ்பாண்ட் படமான “ஸ்பெக்டர்” படத்தில் இடம்பெற்ற “ரைட்டிங் ஒன் த வால்” என்ற பாடலுக்காக ஜிம்மி நேப்பிஸ் மற்றும் சாம் ஸ்மித் ஆகியோர் பெற்றனர்.

-செல்லியல் தொகுப்பு