பெல்ஜியம் – சீனாவில் லிப்ட் ஒன்றில் சிக்கியபடி 30 நாட்கள் போராடிய பெண் தற்போது மரணமடைந்த பின்னரே மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் சியான் நகரில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்வதற்காக வந்த இரண்டு ஊழியர்கள் லிப்ட்டை சோதித்து பார்த்துள்ளனர். பின்னர் 10 மற்றும் 11-ஆவது மாடிக்கு இடைப்பட்ட பகுதியில் லிப்ட் இருந்துள்ளது. உடனடியாக ஊழியர்கள் லிப்ட்டின் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
சீன புத்தாண்டு முடிந்த பின்னர் கோளாறை சரி செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்த அவர்கள் லிப்ட்டின் உள்ளே கவனிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். பின்னர் ஒரு மாதம் கழித்து மார்ச் 5 தேதி லிப்ட்டை திறந்து பார்த்தபோது 35-இல் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட பெண்மணி ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதமே அவர் லிப்டிற்குள் சிக்கி இருக்கலாம் என்றும் ஊழியர்கள் தீவிர சோதனை நடத்தாமல் மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊழியர்களின் அலட்சியத்தின் காரணமாகவே அப்பெண் இறந்துள்ளதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.