Home Featured கலையுலகம் நடிகை கே.ஆர்.விஜயா கணவர் காலமானார்!

நடிகை கே.ஆர்.விஜயா கணவர் காலமானார்!

2013
0
SHARE
Ad

கோழிக்கோடு – பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் கேரளாவில் நேற்று உடல் நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். பிரபல தொழில் அதிபரான இவர் 80 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். அவருக்கு வயது 83.

இவர் குடும்பத்துடன் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு நகரில் வசித்து வந்தார்.

Vijaya KR-Husband and familyகுடும்பத்தினருடன் கே.ஆர்.விஜயா…

#TamilSchoolmychoice

தமிழில் கற்பகம் படத்தில் அறிமுகமான கே.ஆர்.விஜயா பின்னர் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கினார். அவரை 1966இல் வேலாயுதம் காதலித்துத் திருமணம் புரிந்துகொண்டார். கே.ஆர் விஜயா அவருக்கு மூன்றாவது மனைவியாவார்.

அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.

வேலாயுதத்தின் இறுதிச் சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோழிக்கோட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.