Home கலை உலகம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கிறார் கே.ஆர்.விஜயா

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் நடிக்கிறார் கே.ஆர்.விஜயா

815
0
SHARE
Ad

k-r-vijaya-101சென்னை, ஜூலை 24-  தமிழ் திரையுலகில் 1960–களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா.

அதன் பிறகு குணசித்திர வேடங்களில் நடித்தார். கடைசியாக தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நிலாவில் மழை’ என்ற படத்தில் தற்போது நடிக்கிறார்.

முதலில் மறுத்த அவர் கதை கேட்ட பிறகு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டாராம். இந்த படத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்ட டாக்டர் வேடத்தில் வருகிறார்.

#TamilSchoolmychoice

குறைந்த வருவாய் கிடைத்தாலும் போதும் என்று டாக்டர் தொழில் செய்யும் கே.ஆர். விஜயாவுக்கு உயிருக்கு போராடும் வாலிபரை காப்பாற்ற வேண்டிய கட்டாய பொறுப்பு வந்து சேர்கிறது. அந்த இளைஞரை நோயில் இருந்து மீட்கும் போராட்டத்தில் வென்றாரா என்பது படத்தின் உச்சக்கட்டம்.

எஸ்.பி.ஆர்.பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பாண்டு முக்கிய வேடத்தில் வருகிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.பி.ஆர். இயக்குகிறார்.