Home Featured நாடு மெய்க்காப்பாளர் தாக்குதலில் எம்16 துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை!

மெய்க்காப்பாளர் தாக்குதலில் எம்16 துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை!

535
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று வணிகப் பிரமுகர் ஒருவரின் மெய்க்காப்பாளர் சுடப்பட்ட சம்பவத்தில் எம் 16 (M16) ரக தானியங்கித் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவில்லை என காவல் துறையின் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் (படம்) அறிவித்துள்ளார்.

இதற்கு முன் சம்பவத்தைப் பார்த்ததாகக் கூறியவர்கள் எம்16 ரக துப்பாக்கி கொண்டு அந்த மெய்க்காப்பாளர் சுடப்பட்டார் எனக் கூறியிருந்தனர்.

Khalid Abu Bakarசிப்பாங் விமான நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த சம்பவ இடத்தில் பயன்படுத்தப்பட்டு சிதறிக் கிடத்த துப்பாக்கி ரவைகளை வைத்துப் பார்க்கும்போது அவை 9எம்எம் ( 9MM) ரக கைத்துப்பாக்கியிலிருந்து வெளியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் காலிட் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம். கூடியவிரைவில் முடிவுகளைத் தெரிவிப்போம்” என்றும் அவர் கூறியுள்ளார்.