Home Featured இந்தியா கிரிக்கெட்: நியூசிலாந்து வங்காளதேசத்தை வென்றது! இங்கிலாந்து இலங்கையை வென்றது!

கிரிக்கெட்: நியூசிலாந்து வங்காளதேசத்தை வென்றது! இங்கிலாந்து இலங்கையை வென்றது!

559
0
SHARE
Ad

Cricket - ICC-T20-World-Cup-2016கொல்கத்தா: இந்தியாவில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து வங்காளதேசத்தை 75 ஓட்டங்களில் வெற்றி கொண்டது.

20 ஓவர்கள் நிறைவடைந்தபோது நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களை (ரன்) எடுத்தது. அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடிய வங்காளதேசம் 10 விக்கெட்டுகளையும் 15.4 ஓவர்களிலேயே இழந்து 70 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து 75 ஓட்டங்களில் நியூசிலாந்து வென்றதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இங்கிலாந்து இலங்கையை வெற்றி கொண்டது

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்தும் இலங்கையும் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் இங்கிலாந்து 20 ஓவர்கள் நிறைவடைந்தபோது, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் இலங்கை, 20 ஓவர்களை முடித்தபோது 8 விக்கெட்டுகளை இழந்து 161 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரிட்சை

இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன.