Home Featured இந்தியா சியாச்சென் பனிச் சரிவில் காணாமல் போன 2வது இராணுவ வீரரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்!

சியாச்சென் பனிச் சரிவில் காணாமல் போன 2வது இராணுவ வீரரும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்!

715
0
SHARE
Ad

Siachen glacier-mapஸ்ரீநகர் – லடாக் பகுதியில் உள்ள சியாச்சென் பனிப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச் சரிவின் காரணமாக அங்குள்ள இராணுவ முகாம் ஒன்றிலிருந்து காணாமல் போன இரண்டு இராணுவ வீரர்களில் இரண்டாவது வீரரும் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

மூடிய பனிக்குள் சிக்கிக் கிடந்த அந்த இராணுவ வீரர் சுனில் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றொரு வீரரான பவான் தமாங் அந்த பனிச் சரிவு விபத்து காரணமாக ஏற்கனவே உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை காலையில் அந்த பனிச் சரிவு விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த சுனில் ராய்க்கு பெற்றோர்களும் இரண்டு இளைய சகோதரர்களும் உள்ளனர்.

#TamilSchoolmychoice

அவரது நல்லுடல் அவரது ஊருக்கு அனுப்பப்பட்டு முழு இராணுவ மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.