Home One Line P2 தீபாவளியை இராணுவத்தினருடன் கொண்டாடிய நரேந்திர மோடி

தீபாவளியை இராணுவத்தினருடன் கொண்டாடிய நரேந்திர மோடி

707
0
SHARE
Ad

புதுடில்லி : ஆண்டுதோறும் தீபாவளித் திருநாளை இராணுவத்தினருடன் ஏதாவது ஓர் இராணுவ முகாமில் கொண்டாடுவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வழக்கம். அந்த வகையில் நேற்று சனிக்கிழமை (நவம்பர் 14) தீபாவளித் திருநாளுக்கு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள லோங்கிவாலா (Longewala) என்ற பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு வருகை தந்தார் மோடி.

அங்கு இந்திய இராணுவ டாங்கி ஒன்றில் பயணம் செய்ததோடு, அந்த இராணுவ முகாமிலுள்ள இந்திய இராணுவத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் மோடி.

“எங்கே இராணுவத்தினர் பணி செய்கிறார்களோ அங்குதான் எப்போதும் எனக்கு தீபாவளி” என்றும் இராணுவத்தினரிடையே உரையாற்றும்போது மோடி கூறினார்.

#TamilSchoolmychoice