புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது நிகழும் மோதல்கள், அதிகரிக்கும் பதற்றங்களைத் தொடர்ந்து இந்திய இராணுவம் ஒரு புதுமையான அணுகுமுறையை அமுல்படுத்தியிருக்கிறது.
இந்திய இராணுவத்தில் சீன மொழியான மாண்டரின் நன்கு அறிந்தவர்களை எல்லைப் பகுதிகளில் அது நிறுத்தவிருக்கிறது. இதன் மூலம் சீன இராணுவ அதிகாரிகளுடன் சுலபமாக பேச்சு வார்த்தை நடத்த முடியும்.
எதிர்காலத்தில் இணையவழி பாதுகாப்பு நிபுணர்களையும் இராணுவத்தில் பணிக்கு அமர்த்தி சீன எல்லைகளில் பணியாற்ற வைக்க இந்திய இராணுவம் முடிவெடுத்திருக்கிறது.
முதல் கட்டமாக லடாக்கின் கிழக்கு பகுதியில் 5 மாண்டரின் மொழி இராணுவ அதிகாரிகளை இந்திய இராணுவம் பணியில் அமர்த்தியிருக்கிறது.