Home Video விஜய்யின் ‘லியோ’ முன்னோட்டம் – சர்ச்சைகளும் தொடங்கின

விஜய்யின் ‘லியோ’ முன்னோட்டம் – சர்ச்சைகளும் தொடங்கின

697
0
SHARE
Ad

சென்னை : எதிர்வரும் அக்டோபர் 19-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் திரையீடு காணவிருக்கும் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வெளியிடப்பட்ட 3 நாட்களுக்குள் யூடியூப் தளத்தில் மட்டும் 41 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை லியோ முன்னோட்டம் ஈர்த்துள்ளது.

அதே சமயத்தில் முன்னோட்டம் குறித்த சர்ச்சைகளும் தமிழ் நாடு முழுவதும் வெடித்துக் கிளம்பியுள்ளன. குறிப்பாக மகளிர் இயக்கங்கள் விஜய் முன்னோட்டத்தில் பேசும் ஒரு தகாத வார்த்தை குறித்து பரவலான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

முன்னோட்டத்தின் இறுதியில் விஜய் சிகரெட் பிடிப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.

அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: