Home Photo News தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்

தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமையேற்றார்

498
0
SHARE
Ad

சித்தியவான் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 8) சித்தியவானில் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தான்ஸ்ரீ மாணிக்காவின் இளைய சகோதரர் டத்தோ வி.எல்.காந்தனும் கலந்து கொண்டார்.

“ம.இ.காவின் முன்னாள் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்த “தான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு விழா”விற்குத் தலைமையேற்றேன். கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுத்தாளர் சங்கம் இந்த போட்டியை நடத்தி வருவதற்கு மனமார்ந்த பாராட்டுகள். ம.இ.கா தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரும், பல நல்ல பொருளாதாரத் திட்டங்களை முன் வைத்தவரும் ஆவார் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் அவர்கள். பரிசு பெற்ற வெற்றியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்” என டத்தோஸ்ரீ சரவணன் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம் :