Home One Line P2 கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி

கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் அனுமதி

901
0
SHARE
Ad

கொல்கத்தா – முன்னாள் கிரிக்கெட் வீரரான சவுரவ் கங்குலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமடைந்து வருகிறார் என்றாலும் அவரது இதயத்துக்கு செல்லும்  மூன்று இரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனைகளின் மூலம்  அவருக்கு இரத்த நாள அடைப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை  ஜனவரி 2-ஆம் தேதி காலை  உடற்பயிற்சி இயந்திரத்தில் (டிரெட்மில்) கங்குலி நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது நெஞ்சுப்பகுதியில் அவருக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அவர் உடனடியாக கொண்டு செல்லப்பட்டதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

அவரது நெஞ்சு இதயப்பகுதியில் அடைப்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அவருக்கு  ஆஞ்சியோபிளாஸ்டி  எனப்படும் இதயப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அந்தப் பரிசோதனைகளின் மூலம் அவருக்கு மூன்று இரத்தநாளங்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

தற்போது அவர் நல்ல உடல்நலத்தோடு இருந்து வருவதாகவும் மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது. அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை உறுதிப்படுத்தியது. தற்போது அவரது உடல் நலத்தில் எந்தவித அபாயமும் இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கை உறுதிப்படுத்தியது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராகவும் (கேப்டனாக) பலமுறை பதவி வகித்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகிய பின்னர் என்ன ஐபிஎல் எனப்படும் 2020 கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக விளையாடி வந்தார்.