கொவிட்-19 தொற்று காரணமாக சுங்கை பூலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்னேஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை டிசம்பர் 29-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.
அதன் பின்னர் தனது முதல் நிகழ்ச்சியாக கடந்த வியாழக்கிழமை டிசம்பர் 31-ஆம் தேதி, போர்ட் கிள்ளான் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் தனது ஆதரவாளர்களுடன் அவர் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் மனித வள அமைச்சரும், மஇகா துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.
அந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:
Comments