கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஜனவரி 2) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 2,295 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன.
இதில் உள்ளூரில் 2,286 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 9 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.
இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 117,373 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
இன்றுவரையிலான ஒருநாளில் 3,321 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 94,492–ஆக உயர்ந்துள்ளது.
இன்னும், 22,398 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 125 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 51 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இன்றுவரையில் ஒருநாளில் 9 பேர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 483-ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்படியாக சிலாங்கூரில் 638 சம்பவங்களும், அதற்கு அடுத்த நிலையில் ஜோகூரில் 580 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 156 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பினாங்கு மாநிலத்திலும் திடீரென தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்திருக்கின்றன.