Home One Line P2 ஆப்பிள் 39 ஆயிரம் விளையாட்டு குறுஞ்செயலிகளை சீனத் தளத்தில் அகற்றியது

ஆப்பிள் 39 ஆயிரம் விளையாட்டு குறுஞ்செயலிகளை சீனத் தளத்தில் அகற்றியது

762
0
SHARE
Ad

ஹாங்காங் : ஆப்பிள் நிறுவனம் தனது சீன குறுஞ்செயலித் தளத்தில் இருந்து ஒரே நாளில் 39 ஆயிரம் விளையாட்டு குறுஞ்செயலிகளை அகற்றியிருக்கிறது.

விளையாட்டு குறுஞ்செயலிகள் தாங்கள் செயல்படும் நாட்டின் அரசாங்கங்களிடம் இருந்து முன் அனுமதி (லைசென்ஸ்) பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை இதற்கு முன் ஆப்பிள் விதித்தது.

அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு இறுதி நாளாக 31 டிசம்பர் 2020-ஐ ஆப்பிள் நிர்ணயித்திருந்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்துதான் அத்தகைய அனுமதிகளைப் பெறாத 39 ஆயிரம் சீன விளையாட்டுக் குறுஞ்செயலிகளை ஒரே நாளில் ஆப்பிள் அகற்றியிருக்கிறது.

இவற்றோடு சேர்த்து மற்ற நாடுகளின் குறுஞ்செயலிகளையும் சேர்த்து டிசம்பர் 31-ஆம் தேதியோடு மொத்தம் 46 ஆயிரம் விளையாட்டுக் குறுஞ்செயலிகளை ஆப்பிள் அந்த ஒரே நாளில் தனது தளங்களில் இருந்து அகற்றியிருக்கிறது.

சீனாவின் அண்ட்ரோய்டு குறுஞ்செயலித் தளங்கள் ஏற்கனவே விளையாட்டுக் குறுஞ்செயலிகள் முன் அனுமதியைப் பெறும் நிபந்தனைகளைக் கடுமையாக அமுல்படுத்தியிருக்கிறது.