இஸ்லாமாபாத் – அமெரிக்காவில், அதிபர் பராக் ஒபாமாவின் ஏற்பாட்டில் நடைபெறும் அணுசக்தி தொடர்பான உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் லாகூர் வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து தனது வருகையை ரத்து செய்து செய்துள்ளார்.
அமெரிக்காவுக்கு நவாஸ் ஷெரிப் வருகை தரும்போது இதே அணுசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளப் போகும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவரைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
லாகூரில் ஈஸ்டர் பெருநாளன்று கிறிஸ்தவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசமான வெடிகுண்டுத் தாக்குதலில் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 70-ஐத் தாண்டியுள்ளது.