சென்னை – ‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் தற்போது ‘இறைவி’ படம் உருவாகியுள்ளது.
இதில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை சி.வி.குமார் தயாரித்துள்ளார்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், படத்தின் வேலைகள் அனைத்தும் முடித்து விட்டு படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியுள்ளனர்.
படத்தை பார்த்த படக்குழுவினர் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து படத்தை ஜூன் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருக்கிறார். இப்படத்தை அடுத்து தனுஷ் படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.