Home Featured கலையுலகம் இயக்குநர் கார்த்திக் சுப்ராஜுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்குமா?

இயக்குநர் கார்த்திக் சுப்ராஜுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதிக்குமா?

708
0
SHARE
Ad

karthik-subburajசென்னை – இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படமான இறைவி கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியாகி, மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், கதையில் வரும் தயாரிப்பாளர் கதாப்பாத்திரம் ஒன்றை மிக மோசமாகக் காட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வரும் சில தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை நாடி கார்த்திக் சுப்புராஜ் மீது நடவடிக்கை எடுக்கும் படி வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் முடிவுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலும் ஆதரவு கிடைக்கவே, இன்று மாலை இந்த விவகாரம் குறித்து கலந்து பேச தயாரிப்பாளர் சங்கம் கூடுகின்றது.

#TamilSchoolmychoice

தயாரிப்பாளர்களை அவமதிப்பது போல் காட்சி வைத்த கார்த்திக் சுப்ராஜுக்கு தடை விதிக்கப்படுமா என்பது இன்று மாலை தெரியவரலாம்.