Home Featured இந்தியா டேனிஸ் கற்பழிப்பு வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது!

டேனிஸ் கற்பழிப்பு வழக்கு: டெல்லி நீதிமன்றத்தில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது!

638
0
SHARE
Ad

gangrape,mlas-2_647_060716083533புதுடெல்லி – கடந்த 2014-ம் ஆண்டு, 52 வயது டேனிஸ் என்ற சுற்றுலாப் பயணியை கும்பலாகக் கற்பபழித்த 5 பேரின் மீதான குற்றம் நேற்று திங்கட்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் நிரூபணம் ஆனது.

இதனையடுத்து வரும் ஜூன் 9-ம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு அறிவிப்பு குறித்த வாதங்கள் நடக்கவுள்ளதாக கூடுதல் அமர்வு நீதிபதி ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.

கும்பல் கற்பழிப்பு சட்டப்பிரிவு 376 (டி), வழிப்பறி 395, கடத்தல் 366, சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் 342, கொலை மிரட்டல் 506 மற்றும் பொதுவான உள்நோக்கம் 34 ஆகிய ஐபிசி சட்டப்பிரிவுகளின் கீழ் ஐந்து பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice