Home இந்தியா அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்!

அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறை செல்கிறார்!

225
0
SHARE
Ad
ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்களின் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி : மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

அந்த இடைக்கால ஜாமீன் நேற்று சனிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. மருத்துவ காரணங்களுக்காக தன் ஜாமீனை நீட்டிக்க கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தாலும் அந்த மேல்முறையீடு ஜூன் 5-ஆம் தேதிதான் விசாரிக்க முடியும் எனக் கூறிவிட்டது உச்ச நீதிமன்றம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மீண்டும் திஹார் சிறைக்குத் திரும்புவேன் என வாக்களித்துள்ளார் கெஜ்ரிவால்.

#TamilSchoolmychoice

ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா கூட்டணி சந்திப்பில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.