Home Featured இந்தியா 200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

200-க்கும் அதிகமான புராதனச் சின்னங்களை மோடியிடம் ஒப்படைத்தது அமெரிக்கா!

664
0
SHARE
Ad

Modiபுதுடெல்லி – அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த 668 கோடி ரூபாய் மதிப்பிலான புராதன சிற்பங்களை ஒப்படைத்துள்ளது அமெரிக்கா.

அதில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தெய்வச் ‌சிலைகள் உள்ளிட்டவை திரும்ப அளிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட 10 கோடி ரூபாய் மதிப்பிலான சோழர் காலத்துச் சிலையும் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியப் புராதனச் சின்னங்கள் மீது அக்கறை காட்டி, அதை திரும்ப ஒப்படைத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.