Home One Line P2 ஜகமே தந்திரம்: புதுபேட்டைக்குப் பிறகு மிரட்டலாக இறங்கும் தனுஷ்!

ஜகமே தந்திரம்: புதுபேட்டைக்குப் பிறகு மிரட்டலாக இறங்கும் தனுஷ்!

1213
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ஜகமே தந்திரம் .

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் என்றாலே திரைக்கதையில் அமைதியும், மிரட்டலும் கலந்த படைப்பாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் உள்ளது. தற்போது நடிகர் தனுஷ் இவருடன் இணைந்திருப்பது மேலும், இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

இப்படத்தில் ஐஸ்வரியா லெக்ஷ்மி, சஞ்சனா நடராஜன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ், கலையரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜேம்ஸ் காஸ்மோ என்பவர் ஸ்கோட்டிஷ் நாட்டு நடிகராவார். இவர் பிரேவ்ஹார்ட், வொண்டர் வூமென், கேம் அப் டுரோன்ஸ் போன்ற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம்: ஜேம்ஸ் காஸ்மோ

இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற மே 1-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் குறுமுன்னோட்டத்தைக் காணலாம்: