புதுடில்லி – குடும்ப அரசியலையே பார்த்து வரும் இந்திய அரசியல்வாதிகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை திருமணம் ஆகாதவராக இருந்து வருகின்றார் என்பது ஒரு வித்தியாசம் என்றால்,
பிரதமரான பின்னர் இதுவரை தனது குடும்பத்தினர் யாரையும், அரசியல் களத்திலோ, ஏன் தனது வீட்டுப் பக்கம் கூட சேர்க்கவில்லை என்பது இன்னொரு வித்தியாசம்!
2014ஆம் ஆண்டு மே மாதம் இந்தியப் பிரதமரான பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து முதன் முறையாக தனது தாயாரை புதுடில்லியிலுள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்துள்ளார் மோடி.
“முதல் முறையாக எனது தாயார் ரேஸ் கோர்ஸ் சாலையிலுள்ள எனது இல்லத்திற்கு வந்தார். அவருடன் தரமான முறையில் எனது நேரத்தை செலவிட்டேன். தற்போது அவர் குஜராத் திரும்பி விட்டார்” என நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார் மோடி.
அந்தப் பதிவுடன், தனது தாயாருடன் தான் செலவிட்ட கணங்களில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களையும் மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
தள்ளுவண்டியில் தனது தாயாரை அழைத்துக் கொண்டு தனது இல்லப் பூந்தோட்டத்தை சுற்றிக் காட்டும் மோடி…
தனது இல்லத்தில் வளர்க்கப்படும் செடிகளை தாயாருக்குக் காட்டி மகிழும் மோடி…
-செல்லியல் தொகுப்பு