Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

தமிழகத் தேர்தல்: வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – ஒரு வரிச் செய்திகள்!

392
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalசென்னை – இன்று மாலை 6.00 மணியுடன் நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் வாக்களிப்பு குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:

  • மாலை 5.00 மணி வரையில் தமிழகம் முழுவதும் சராசரி வாக்குப் பதிவு 69.19 சதவீதமாகும்.
  • அதிகபட்ச வாக்குப் பதிவு தரும்புரி மாவட்ட தொகுதிகளில் பதிவாயின.
  • அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் அதிகபட்சமாக 85 சதவீதத்துக்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தருமபுரி மாவட்டத்தில்தான் அதிகபட்ச வாக்குப் பதிவு நடந்தது என்பதும் இந்த தருமபுரி தொகுதியில்தான் அன்புமணி நாடாளுமன்ற உறுப்பினராக வென்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.
  • குறைந்த பட்ச வாக்குகள் சென்னை மாநகரில் பதிவாகியுள்ளது.
  • இறுதி நிலவர வாக்குப் பதிவு சதவீதங்கள் இரவு 8.00 மணி (இந்திய நேரம்) அளவில் வெளியிடப்படும்
  • நகர்ப்பகுதிகளில் வாக்குப் பதிவு மந்தம் என தமிழகத் தேர்தல் ஆணையத் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
  • வில்லிவாக்கம் (சென்னை) தொகுதியில் ஆகக் குறைவாக, 50 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • வாக்களிப்பு மையம் ஒன்றில் 10,000 ரூபாயுடன் பிடிபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • ஒரு சில இடங்களில் சிறுசிறு அசம்பாவிதங்கள் நடந்தாலும், பெரிய அளவில் எந்தவித எதிர்மறையான சம்பவமும் இல்லாமல் தமிழகத் தேர்தல் நிறைவடைந்தது.
  • புதுச் சேரியில் 80.17 சதவீத வாக்குகள் பதிவு