Home Featured கலையுலகம் “கனவு நிறைவேறியது” – ஏஆர்.ரஹ்மானைச் சந்தித்த சித்தி நூர்ஹாலிசா நெகிழ்ச்சி!

“கனவு நிறைவேறியது” – ஏஆர்.ரஹ்மானைச் சந்தித்த சித்தி நூர்ஹாலிசா நெகிழ்ச்சி!

872
0
SHARE
Ad

AR Rahman - Sitiகோலாலம்பூர் – இசை நிகழ்ச்சிக்காக மலேசியா வந்திருந்த ஏஆர்.ரஹ்மான், நாட்டின் புகழ்பெற்ற மலாய் பாடகி டத்தோ சித்தி நூர்ஹாலிசாவை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஏஆர்.ரஹ்மான், சித்தி நூர்ஹாலிசா இருவருமே தங்களது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் சற்று முன்பு பகிர்ந்துள்ளனர்.

இச்சந்திப்பு எப்போது நடைபெற்றது என்ற விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

#TamilSchoolmychoice

“வந்ததற்கு மிக்க நன்றி. எதிர்காலத்தில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகின்றேன். இன்ஷா அல்லா” என்று சித்தி நூர்ஹாலிசா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய கனவு நிறைவேறியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.