Home Featured இந்தியா பாட்லா விவகாரம்: சோனியா வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

பாட்லா விவகாரம்: சோனியா வீட்டை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம்!

804
0
SHARE
Ad

bjp-protesபுதுடெல்லி – சர்ச்சைக்குரிய டெல்லி பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கருத்துக்கு எதிராக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வீட்டை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

2008-ஆம் ஆண்டு டெல்லியில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்ட 6 நாட்கள் கழித்து, டெல்லி பாட்லா ஹவுஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஷாஜத் என்ற தீவிரவாதி தப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இந்த மோதலில் ஷாஜத் சுட்டதில் காவல்துறை ஆய்வாளர் சந்த் சர்மா உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த என்கவுண்ட்டர் போலியானது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் அப்போது கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில் கடந்த வாரம் ஐஎஸ் இயக்கத்தின் காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் அந்த காணொளியில் பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டரில் இருந்து தப்பிய ஷாஜத் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

bjpஇதனால் பாட்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. இருப்பினும் தாம் தெரிவித்த கருத்தில் எந்த மாற்றமும் இல்லை; இந்த என்கவுண்ட்டர் குறித்து மத்திய அரசு உரிய நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார் திக்விஜய்சிங்.

இருப்பினும் காங்கிரஸ் கட்சி மேலிடமோ இது திக்விஜய்சிங்கின் தனிப்பட்ட கருத்து என ஒதுங்கிக் கொண்டது. இந்நிலையில் திக்விஜய்சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டை முற்றுகையிட்டு நேற்று பாஜகவின் போராட்டம் நடத்தினர்.

இப்போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்கு உதவுவதாக கண்டனம் தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.