Home Featured கலையுலகம் காற்பந்து வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார்!

காற்பந்து வீரரை தாக்கியதாக நடிகர் சூர்யா மீது புகார்!

1015
0
SHARE
Ad

suryaசென்னை – சென்னை அடையாறு பகுதியில், நடுசாலையில் காற்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சுங்கத்துறை காற்பந்து அணிக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நேற்று மாலை அடையார் மலர் மருத்துவமனை அருகே  பிரேம்குமார் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முன்னால் காரில் சென்ற பெண்மணி திடீரென்று காரை நிறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதனால் பிரேம்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது. மேலும் இருசக்கர வாகனமும் சேதமடைந்ததால்,  காரில் வந்த பெண்ணுடன் பிரேம்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பின்னால் காரில் வந்த நடிகர் சூர்யா, பொது இடத்தில் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தவறு என்று கூறி, கன்னத்தில் அடித்ததாகவும்,

மேலும் தமக்கு அவமானத்தை ஏற்படுத்திய நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரேம்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.