Home Featured உலகம் புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஓமார் மனநலம் பாதிக்கப்பட்டவன் – முன்னாள் மனைவி தகவல்!

புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஓமார் மனநலம் பாதிக்கப்பட்டவன் – முன்னாள் மனைவி தகவல்!

681
0
SHARE
Ad

FLORIDA-SHOOTINGகோலாலம்பூர் – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓர்லாண்டோ நகரில், கேளிக்கை விடுதி ஒன்றில் தனியாளாக துப்பாகிச் சூடு நடத்தி 50 பேர் இறப்பிற்குக் காரணமான நபர், மனநலம் பாதிக்கப்பட்டு, நிதானத்தை இழந்திருப்பதாக அவரது முன்னாள் மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

ஓமார் மாட்டின் என்ற அந்த 29 வயது நபரின் முன்னாள் மனைவி சிடோரா யூசிபி நேற்று காவல்துறை மற்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருமணம் செய்து நான்கு மாதங்கள் அந்நபரோடு தான் வாழ்ந்ததாகவும், பல போராட்டங்களுக்குப் பிறகு தனது குடும்பத்தினர் அவரிடமிருந்து தன்னை “மீட்டதாகவும்” சிடோரா தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice

 

 

 

Comments