கோலாலம்பூர் – ரயானி ஏரின் சேவை உரிமத்தை (Air Service Licence – ASL) மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் (The Malaysian Aviation Commission) இரத்து செய்தது.
இது குறித்து ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஎஸ்எல் கட்டுப்பாடுகளை ரயானி ஏர் மீறியதாலும், வர்த்தக விமானமாக முறையான நிதி மற்றும் நிர்வாகத் திறன் கொள்ளாததாலும் அதனால் தொடர்ந்து இயங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
“அதன் விளைவாக, ரயானி ஏர் இன்று முதல் வர்த்தக விமானமாக இயங்காது” என்று ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.