Home Featured வணிகம் புதிதாக விண்ணப்பிக்க ரயானி ஏர் நிறுவனத்திற்கு அமைச்சு ஆலோசனை!

புதிதாக விண்ணப்பிக்க ரயானி ஏர் நிறுவனத்திற்கு அமைச்சு ஆலோசனை!

697
0
SHARE
Ad

Rayaniairகோலாலம்பூர் – இரத்து செய்யப்பட்ட செய்யப்பட்ட ரயானி ஏர் விமான நிறுவனம், மீண்டும் செயல்பட வேண்டுமானால், உள்நாட்டு வான் போக்குவரத்துறையிடம் புதிய விண்ணப்பத்தை அளிக்க வேண்டும் என துணைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோ அப்துல் அசிஸ் கப்ராவி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அவ்விண்ணப்பம் செய்யும் போது, புதிய வியாபார வியூகத்தையும் அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ரயானி ஏர் மீண்டும் செயல்பட அரசாங்கத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இரத்து செய்யப்பட்ட அவர்களது உரிமத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் மீண்டும் தொடர்ந்து செயல்பட வேண்டுமானால் புதிய விண்ணப்பம் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளோம்” என்று கப்ராவி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice