கோலாலம்பூர் – தன்னிடமிருந்து நிர்வாகத்தைக் கைப்பற்ற நினைக்கும் தனது பணியாளர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ரயானிஏர் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி ரவி அழகேந்திரன், புத்திசாலிகளாக இருந்தால் அவர்கள் சொந்தமாகப் புதிய விமான நிறுவனத்தைத் தொடங்கட்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.
எனினும், சுமார் 400 பணியாளர்களுக்கு சம்பள பாக்கியும், சொஸ்கோ, பிஎப் (வைப்புநிதி) உள்ளிட்டவைகளை செலுத்தவில்லை என்று கூறும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள ரவி, தனது பணியாளர்களுக்கு விரைவில் பணம் கொடுக்கப்படும் என்றும், முதலீட்டாளர்களிடம் 51 சதவிகித பங்கை விற்பனை செய்ய தான் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பணியாளர்களிடம் வேலை நிறுத்தம் தான் முதலீட்டாளர்களை விலக வைத்தது என்றும், நிறுவனத்தை நிதி நெருக்கடிக்குத் தள்ளியது என்றும் ரவி அழகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.