Home Featured இந்தியா சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 பேர் மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம்!

668
0
SHARE
Ad

subramaniyam tkபுதுடெல்லி – பாஜ மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உட்பட 6 முக்கியப் பிரமுகர்களுக்கு மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நிபுணர் நரேந்திர ஜதாவ், குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, கேரளாவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி, பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்த 6 பேரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை ‌செய்தது.

#TamilSchoolmychoice

அதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.