Home Featured கலையுலகம் “ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்” – குடும்பத்தினர் தகவல்!

“ரஜினிகாந்த் நலமுடன் உள்ளார்” – குடும்பத்தினர் தகவல்!

595
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில தினங்களாக ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவர் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சமூக வலைத் தளங்களில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் இன்று விளக்கம் அளித்த அவரது குடும்பத்தினர், ரஜினி நலமுடன் இருக்கிறார் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

Rajnikanth Linga Audio Launchரஜினி குடும்பத்தின் சார்பாக, தொலைபேசி வழி தமிழக தொலைக்காட்சி ஊடகங்களிடம் பேசிய ரஜினியின் அதிகாரபூர்வ பத்திரிக்கைத் தொடர்பாளர், ரஜினி நலமுடன் உள்ளார் என்றும், தற்போது ஓய்வில் இருக்கும் அவர் மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினி உடல் நலத்துடன் உள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், அவரது நேரடி காணொளி ஒன்றை அமெரிக்காவில் இருந்து பெற்று வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அந்தப் பத்திரிக்கைத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.