Home Featured நாடு தொழிலதிபர் சுட்டுக் கொலை: கொலையாளியின் நிபுணத்துவம் குறித்து காவல்துறை ஆச்சரியம்!

தொழிலதிபர் சுட்டுக் கொலை: கொலையாளியின் நிபுணத்துவம் குறித்து காவல்துறை ஆச்சரியம்!

1219
0
SHARE
Ad
shootdead

ஷா ஆலம் – சுங்கை ராசாவ் சுங்கச் சாவடி அருகே நேற்று 43 வயதான தொழிலதிபர் ஒருவர் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கூய் டான் ஹாக் என்ற அந்த நபரின் உடம்பில் ஆறு தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் காரில் அவர் உயிரற்ற நிலையில் காணப்பட்டார்.

நேற்று மாலை 4.35 மணியளவில் கிள்ளானில் இருந்து டொயோட்டா வெல்பயர் இரகக் காரில் காஜாங்கில் உள்ள தனது இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரை, சுங்கச் சாவடி அருகே மோட்டரில் வந்த நபர் துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என மாவட்ட காவல்துறைத் தலைமை துணை ஆணையர் ஷாபியென் மாமட் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“முன்னதாக, அந்நபர் சுங்கச் சாவடியைக் கடக்க ‘டச் அண்ட் கோ’ அட்டையைப் பயன்படுத்தியுள்ளார் என்றும் ஷாபியென் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அந்நபரின் கார் எஞ்சின் இயங்கத்திலேயே இருந்ததாகவும் ஷாபியென் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டாரில் வந்த மர்ம நபர் அவரது காரை நோக்கி 10 முறை சுட்டுள்ளான். அதில் 6 குண்டுகள் தொழிலதிபரின் உடலில் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு, துப்பாக்கியால் சுட்டவன் அதைக் கையாள்வதில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்தவனாக இருக்கலாம் என காவல்துறை கருதுகின்றது. காரணம் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்துள்ள இடங்களை வைத்து காவல்துறை அதனைக் கணித்துள்ளது.